பதிவு செய்த நாள்
22
மார்
2016
12:03
சிவகங்கை: சிவகங்கை அருகே இருதரப்பினர் இடையே பிரச்னை இருப்பதால் புரவி எடுப்பு விழாவை வருவாய், அறநிலையத்துறையினர் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது. சிவகங்கை அருகே ஈசனுõர் செருவலிங்க அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா ஏப்., 1, 2 ல் நடக்கிறது. இந்த விழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டது. சிவகங்கை ஆர்.டி.ஓ., அரவிந்தன் தலைமையில் நடந்த சமாதான கூட்ட ங்களில் தீர்வு எட்டப்படவில்லை. இதையடுத்து இருதரப்பைச் சேர்ந்த 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரு தரப்பினர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். மார்ச் 19 ல் டி.ஆர்.ஓ., இளங்கோ தலைமையில் நடந்த கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி திருவிழாவை நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது. நேற்று மற்றொரு தரப்பினர் ‘பிடிமண்’ கொடுத்ததால் புரவி செய்ய அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால் ரேஷன்கார்டு, வாக்காளர் அட்டையை ஒப்படைப்பதாக கூறி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின் டி.ஆர்.ஓ., தலைமையில் தாசில்தார் நாகநாதன் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் வருவாய், அறநிலையத்துறையினர் இணைந்து புரவி எடுப்பு தி ருவிழாவை நடத்துவது, கலைநிகழ்ச்சி நடத்தக்கூடாது என, முடிவு செய்யப்பட்டது. அதற்குள் நீதிமன்ற தீர்ப்பு வந்துவிட்டால் அதன்படி நடந்து கொள்வது என, தீர்மானிக்கப்பட்டது.