சிவகங்கை: நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயிலில் சேங்கை வெட்டு திருவிழாவில் பெண்கள் மதுக்குடம் எடுத்துச் சென்றனர். பல நூற்றாண்டுகளாக நடக்கும் இந்த விழா மார்ச் 15 காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. பஸ் ஸ்டாண்ட் அருகே மண் பானைகளில் நவதானியங்கள் வளர்க்கப்பட்டன. எட்டாம் நாளான நேற்று நவதானியங்களில் இருந்து பாலை பிழிந்து மதுக்குடங்களில் சேகரித்தனர். அவற்றை 500 பெண்கள் கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். பின் கோயில் அருகே மரத்தில் பாலை ஊற்றிவிட்டு, சிறிது பாலை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். ஆண்கள் கோயில் அருகே குடிநீர் ஊரணியில் இருந்து மண்ணை வெட்டி வெளியே கொட்டினர்.