பழநி: பழநி மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் தாரை தப்பட்டை மேளம் அடிக்க கோயில் நிர்வாகம் தடைவிதித்துள்ளது.இங்கு முக்கிய விழா காலங்களில் வரும் பாதயாத்திரை பக்தர்கள் காவடி, பால்குடங்கள், தீர்த்தக்குடங்கள் எடுத்து வருகின்றனர்.கூடவே தாரை தப்பட்டை, டிரம்செட் மேள தாளத்துடன், ஆட்டம் பாட்டம் நடத்தி கிரிவீதியை வலம் வந்து அதன்பின் படிப்பாதை, யானைப்பாதை வழியாக மலைக்கோயில் செல்கின்றனர். அங்கு வெளிப்பிரகாரத்தில் ஆட்டம் பாட்டத்துடன் காவடி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.இந்த நேர்த்திக் கடனுக்காக டிரம்செட், தாரை தப்பட்டையுடன் வருகின்றனர். அதன் சத்தத்தால் பிற பக்தர்கள் பாதிக்கப்படுவதாக கூறி மலைக்கோயில், யானைப்பாதை, படிப்பாதையில் டிரம்செட் அடிக்க கூடாது என கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.