சிம்மபுரீஸ்வரர் தேரோட்டம்: வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2016 01:03
லாலாபேட்டை: கரூர் அருகே, லாலாபேட்டை சிம்மபுரீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். கரூர் மாவட்டம், லாலாபேட்டை அடுத்த கருப்பத்தூரில் காவிரிக் கரையோரம் சிறப்பு பெற்ற சிம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கடந்த, 14ம் தேதி கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா துவங்கியது. கடந்த 15 மற்றும் 16ம் தேதி கோவிலில் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் சுகுந்தகுந்தாளம்மன் சிம்மபுரீஸ்வருக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. சுகுந்தகுந்தாளம்மன், சிம்மபுரீஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்று காலை நடராஜர் புறப்பாட்டுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இரவு பஞ்சமூர்த்தி புறப்பாட்டில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். இன்று இரவு சண்டிகேஸ்வரர் புறப்பாடு நடக்கிறது.