ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று புஷ்பயாகம் நடந்தது. ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் மார்ச் 15 முதல் நடந்து வந்தது. இதில் 9ம் திருநாளான பங்குனி உத்திரதினத்தன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடந்தது. மறுநாள் முத்துகுறி ஊஞ்சல் சேவையும், வேதபிரான் பட்டர் அனந்தராமன், சுதர்சன் பட்டர் ஆண்டாள் புராணமும் படித்தனர். நேற்று காலையில் திருமஞ்சனமும், மாலையில் வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் பல்வேறு மலர்களால் புஷ்ப யாகமும் நடந்தது. ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு பத்ரி நாராயண பட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகளும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமராஜா மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.