ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி விழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2016 11:03
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை மஹாகணபதி பூஜை, புண்யாஹாசனம், காப்புகட்டுதல் நடந்தது. பின் மாரியம்மன் கோயில் தெரு சாலியர் பொது சாவடியிலிருந்து கொடிபட்டம் புறப்பட்டு கோயிலை வந்தடைந்தது. அர்ச்சகர் ஹரிஹரன், உதவி அர்ச்சகர் சுந்தர் ஆகியோர் கொடியேற்றி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். செயல்அலுவலர் அறிவழகன், வி.பி.எம்.சங்கர் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா நாட்களில் அம்மன் வீதியுலா நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான ஏப். 2ல் பூப்பல்லக்கும், ஏப்7ல் பூக்குழியும், ஏப் 8ல் தேரோட்டமும் நடக்கிறது. டவுன் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.