காரைக்கால்: காரைக்கால் மாவட்டத் தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ள புனித தேற்றரவு அன்னை ஆலயத்தில் நேற்று முன்தி னம் நள்ளிரவு, ஏசு உயிர்த்தெழும் நிகழ்வு நடந்தது. ஆலய பங்குத்தந்தை ஆண்டலி லுார்துராஜ் அடி கள் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர் கள் மெழுகுவர்த்தி ஏந்தி, வழி பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி பங்கு குரு சிரில் உள்ளிட்டோர் செய்தனர். கோட்டுச்சேரி, குரும்பகரம், சேத்துார் உள்ளிட்ட ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலி நடைபெற்றது.