பழநி: கோடை வெயிலில் பாதயாத்திரையாக நடந்துவரும் பக்தர்கள் வசதிக்காக பழநிகோயில் வடக்குகிரி வீதிபாதவிநாயகர் கோயில் முதல் குடமுழுக்கு நினைவு அரங்கம் வரை தற்காலிக நிழற்பந்தல் அமைக்கப்படுகிறது. பழநியில் பங்குனி உத்திரவிழா முடிந்தபின்னரும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக தீர்த்தக்காவடிகளுடன் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் மொத்தமாக வடக்குகிரிவீதி பாதவிநாயகர் கோயில் அரு கே குவிகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் பக்தர்கள் வசதிக்காக வடக்குகிரிவீதி பாதவிநாயகர் கோயில் முதல் குடமுழுக்கு நினைவு அரங்கம் வரை தற்காலிக நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பாதவிநாயகர் ÷ காயில் அருகே அத்துமீறி வாகனங்கள் செல்லமுடியாத வகையில் தடுப்புகள் அமைக்கபடுகிறது.