திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோவில் யாகசாலை பூஜை துவங்கியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2016 12:03
கடலுார்: திருவந்திபுரம் ஹயக்ரீவர் கோவில் மகா சம்ப்ரோஷணத்தையொட்டி நேற்று யாகசாலை பூஜை துவங்கியது. கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் மலையில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவில் மகா சம்ப்ரோஷ்ணம், வரும் 3ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி, நேற்று (30ம் தேதி) மாலை 5:00 மணியளவில், யாகசாலை பூஜை துவங்கியது. இன்று (31ம் தேதி) காலை 7:00 மணிக்கு யாக சாலை புண்யாகவாசனம், நாளை (1ம் தேதி) காலை 7:00 மணிக்கு நித்ய விசேஷ ஹோமங்கள் நடக்கிறது. 2ம் தேதி மாலை 5:00 மணிக்கு விசேஷ மகா சாந்தி திருமஞ்சனம், சயனாதிவாசம், சர்வ தேவார்ச்சனம், மூர்த்தி ஹோமம் நடக்கிறது. 3ம் தேதி காலை 5:00 மணிக்கு விஸ்வரூபம், விசேஷ ஹோமங்கள், யாத்ரா தானம், கடம் புறப்பாடாகி 8:00 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் மகா சம்ப்ரோஷணம் நடக்கிறது.