புதுச்சேரி: இடையார்பாளையம் சொர்ணகர்ஷன பைரவர் கோவிலில் இன்று திரயம்பகாஷ்டமி சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. புதுச்சேரி - கடலுார் சாலையில் இடையார்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே ஞானமேடு சப்தகிரி நகரில் அமைந்துள்ள சொர்ணகர்ஷன பைரவர் கோவிலில் இன்று (31ம் தேதி) தேய்பிறை அஷ்டமியில், திரயம்பகாஷ்டமியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. பூஜை ஏற்பாடுகளை, ஆலய ஸ்தாபகர் முத்துகுருக்கள் செய்து வருகிறார்.