பதிவு செய்த நாள்
05
ஏப்
2016
12:04
சேலம்: சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் வரும், 15ம் தேதி முதல், ராமநவமி கொண்டாடப்பட உள்ளது. வரும், ஏப்., 14ம் தேதி தமிழ் வருடப்பிறப்பையொட்டி, சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில், சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கும். அதைத் தொடர்ந்து, 15ம் தேதி முதல், 25ம் தேதி வரை, ராமநவமி கொண்டாடப்பட உள்ளது. தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். பின், பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்படும்.