பதிவு செய்த நாள்
05
ஏப்
2016
12:04
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி ஒன்றியம், கன்னந்தேரி கிராமம் கஸ்பாவில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 20ம் தேதி பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதலுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, தினசரி அபிஷேக ஆராதனை நடந்து வந்தது. நேற்று, சுவாமிக்கு திருக்கல்யாணம், தேரோட்டம் நடந்தது. இன்று, அலகு குத்துதல், அக்னி கரகம், பூங்கரகம், தீ மிதித்தல் நடைபெறும். நாளை, கம்பம் அகற்றுதல், வண்டி வேடிக்கை நடைபெறும். 7ம் தேதி, சுவாமி ஊர்வலம், மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவுபெறும்.