திருப்பதி : ஆந்திர கவர்னர் நரசிம்மன் நேற்று(04-04-16) மாலை திருமலையில் ஏழுமலையானைத் தரிசித்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு பிரசாதங்களை வழங்கினர். முன்னதாக ஏழுமலையானை தரிசிப்பதற்காக, விமானம் மூலம் திருப்பதி வந்த அவரை சித்தூர் கலெக்டர் சித்தார்த் ஜென் வரவேற்றார்.