பதிவு செய்த நாள்
09
ஏப்
2016
12:04
நாசிக்: மஹாராஷ்டிர மாநிலம், நாசிக் நகரில், கோதாவரி ஆற்றில் போதிய தண்ணீர் ஓடாததால், ஆண்டுதோறும் நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சியை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. மஹாராஷ்டிர மாநிலம், நாசிக் நகரில், ஆண்டு தோறும், குடி பாட்வா புத்தாண்டு தினத்தன்று கும்பமேளா நடைபெறும். அப்போது, கோதாவரி ஆற்றில், ஹிந்துக்கள் புனித நீராடுவது வழக்கம். ஆனால், கோதாவரி ஆறு, நீரின்றி வறண்டு கிடக்கிறது. மாநிலம் முழுவதும், இதேபோன்று வறட்சி காணப்படுகிறது. கடந்த, 139 ஆண்டுகளில் முதல்முறையாக, கும்பமேளா தினத்தன்று, புனித நீராடுவது கேள்விக்குறியானது. இந்நிலையில், நேற்று முன்தினம், இரவோடு இரவாக, லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, ஆற்றின் ஒரு பகுதியில் நிரப்பப்பட்டது. அதில், பக்தர்கள், புனித நீராடுவதை தவிர்த்து, குறைந்தபட்ச மதச்சடங்குகளை செய்து திருப்தி அடைந்தனர்.