திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே பையூரில் புரவி எடுப்பு விழா துவங்கியது. இக்கிராமத்தில் வடகலை கூத்தய்யனார், கருமலை சாத்தையனார் எழுந்தருளியுள்ளனர். இவ்விரு அய்யனார்களுக்கும் கிராமத்தினர் பங்குனியில் புரவி எடுத்து விழா காண்பது வழக்கம். கடந்த 8 ஆண்டுகளாக இவ்விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு பையூர் ஊரார் விழா நடத்துவதை முன்னிட்டு மார்ச் 25ல் பிடிமண் எடுத்து மண்டுப்புலி கோயில் அருகே சூளைக்கரையில் 5 புரவிகளை வடித்துள்ளனர். நேற்று காலை கிராமத்தினர் விருந்து உபசரிப்பை துவக்கினர். நேற்று மாலை, புரவிகளை ஊர்வலமாக எடுத்து வந்து குளங்கரைக் கீழ்கரை அருகே புரவிப் பொட்டலில் வைத்தனர். இன்று மாலை புரவிகள் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும்.