Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராஜபாளையத்தில் சித்திரை வெண்குடை ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2016
12:04

உடுமலை: உடுமலை காமாட்சி அம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி மற்றும் திருக்கல்யாண திருவிழா, இன்று நோன்பு சாட்டுதலுடன் துவங்கி, ஏப்., 22ம் தேதி வரை நடக்கிறது. நேருவீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி விழாவுக்கான நோன்பு சாட்டுதல் இன்றிரவு, 7:00 மணிக்கு நடக்கிறது. ஏப்., 19ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு, கணபதி ேஹாமமும், காலை, 9:00 மணிக்கு, முளைப்பாலிகையிடுதலை தொடர்ந்து, திருவிழா கொடியேற்றப்படுகிறது. மாலை, 4:30 மணிக்கு, திருமூர்த்திமலையில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு, கும்பஸ்தாபிதம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, லலிதா சகஸ்ரநாம பாராயணமும், இரவு, 8:00 மணிக்கு, இன்னிசை பாட்டு மன்றமும் நடக்கிறது. ஏப்., 20ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, உடுமலை மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் கொண்டு செல்லப்படுகிறது. மாலை, 4:30 மணிக்கு, காமாட்சியம்மனுக்கு மாவிளக்கு, பொங்கல் பூஜையும், இரவு, 8:00 மணிக்கு, இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 21ம் தேதி, காலை, 9:30 முதல் 11:00 மணிக்குள், ஏகாம்பரேஸ்வரருக்கும் காமாட்சியம்மனுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. காலை, 11:30 மணிக்கு, மகா தீபாராதனையும், மாலை, 6:00 மணிக்கு, அம்மன் வீதியுலாவும், இரவு, 8:30 மணிக்கு, நடன நிகழ்ச்சியும் நடக்கின்றன. ஏப்., 22ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, காமாட்சியம்மனுக்கு மகா அபிேஷகமும், மதியம், 12:00 மணிக்கு, அலங்கார, மகா தீபாராதனையும், மாலை, 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், மஞ்சள் நீராட்டுதலுடன் அம்மன் வீதியுலாவும் நடக்கிறது; கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar