பதிவு செய்த நாள்
13
ஏப்
2016
12:04
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் சித்திரை வெண்குடை திருவிழா நாளை (ஏப்., 14) நடக்கிறது. காலை 7.35 மணிக்கு செம்புலி சித்தன் காலில் தண்டை அணிந்து, கையில் வெண்குடையுடன் செல்லம் வடக்கு, தெற்கு தெருக்கள், ஆனையூர் தெரு, காமாட்சியம்மன்கோயில் தெரு போன்ற தெருக்களில் சுற்றி வருவார். இவருடன் முத்து, பவளம், பஞ்சவர்ண குடைகள் செல்லும். பின் அய்யனார்கோயில் சென்று, பிற்பகலில் ராஜூக்கள் கல்லுாரி எதிரே அம்பேத்கர் நகர், வாழவந்தாள்கோயில் வந்து வடக்கு தெரு சாவடி வந்து சேரும். ஏப்., 15ல் அம்பலபுளி பஜார், ஆசாரிமார் தெரு, பெரியசாவடி சென்று, பின் வடக்கு தெரு சாவடி வந்தடையும்.