Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுவேதாரண்யேஸ்வரர் கோவில் ... மீனாட்சி சுந்தரேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்ரகுப்தர் கோவிலில் 20ல் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2016
12:04

திருப்பூர் : சின்னாண்டிபாளையத்தில் உள்ள சித்ர குப்தர் கோவிலில், 87ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா, வரும், 20ல் துவங்குகிறது. திருப்பூர் மங்கலம் ரோடு, சின்னாண்டிபாளையத்தில், எமதர்மனின் கணக்கர் எனப்படும் சித்ர குப்தருக்கு, தனி கோவில் உள்ளது. இங்கு, தலைப்பாகையுடன், வலது கையில் எழுத்தாணி, இடது கையில் பனை ஓலையுடன், கணக்கு எழுதும் கோலத்தில், சித்ர குப்தர் வீற்றிருக்கிறார். காஞ்சிபுரத்தில் உள்ள சித்ர குப்தர் கோவிலுக்கு அடுத்ததாக, இக்கோவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. சித்ர குப்தர் அவதரித்த சித்ரா பவுர்ணமி நாளில், ஆண்டுதோறும் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு, 87ம் ஆண்டு விழா, வரும், 20ல் துவங்குகிறது. அன்று மாலை, 6:00க்கு சித்ர குப்தர் வீதி உலா, பால் குட ஊர்வலம், அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 21ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு, கணபதி ஹோமம்; காலை, 7:31க்கு, சித்ர குப்தர் மூல மந்திர யாகம்; திரவிய யாகம், பட்டு வஸ்திர பூர்ணாஜஹுதி, தீபாராதனை; காலை, 8:30 மணிக்கு, சித்ர குப்தருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சித்ர குப்தர் புராணம் வாசித்தல் உள்ளிட்டவை நடைபெறும். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar