பதிவு செய்த நாள்
18
ஏப்
2016
12:04
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாணத்தில் பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள், திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து இன்று (ஏப்.18) மாலை புறப்பாடாகின்றனர்.பெற்றோரின் திருக்கல்யாணத்தில் பங்கேற்க பாண்டிய ராஜாவாக சுவாமி, தெய்வானையுடனும், தாரை வார்த்துக் கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளும் குன்றத்திலிருந்து புறப்பாடாகின்றனர். நாளை காலை மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், பிரியாவிடை வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து, திருக்கல்யாணத்தில் பங்கேற்பர். மதுரை சுவாமிகளுடன் வீதி உலா நிகழ்ச்சியில் பங்கேற்று அருள்பாலித்து, ஏப்.,23 அன்று மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து விடைபெறும் நிகழ்ச்சி முடிந்து, தெற்காவணி மூல வீதியிலுள்ள மண்டபத்தில் எழுந்தருளுவர். அன்று மாலை பூப்பல்லக்கில் சுவாமி, தெய்வானை, சிம்மாசனத்தில் பவளக்கனிவாய் பெருமாள் திருப்பரங்குன்றம் திரும்புவர். கோயில் நடை வழக்கம் போல் திறந்திருக்கும்.