பதிவு செய்த நாள்
18
ஏப்
2016
12:04
சோழவந்தான்: சோழவந்தான் பூமேட்டுத்தெரு உச்சிமாகாளியம்மன், வடக்கத்தி காளியம்மன் கோயில்களில் பங்குனி திருவிழா 11 நாட்களுக்கு நடக்கிறது. கொடியேற்றத்தையொட்டி நேற்று சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இரவு திருவிளக்குபூஜையை எம்.வி.எம்., குழும நிர்வாகி வள்ளிமயில் துவக்கினார். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏப்., 18ல் பூச்சொரிதல், 19 ல் வைகை ஆற்றில் தீர்த்தக்குடம், பால்குடம், 20 ல் இரவு சிம்ம வாகனத்தில் வீதிவுலா, ஜெனகைமாரியம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளல், முளைப்பாரி ஊர்வலம், 22ல் மஞ்சள் நீராட்டு நடக்கிறது. ஏற்பாடுகளை பூமேட்டுத்தெரு விழாக்குழுவினர் மற்றும் எம்.வி.எம்., குழும தலைவர் மணிமுத்தையா, பள்ளி தாளாளர் மருதுபாண்டியன் செய்துள்ளனர்.