பதிவு செய்த நாள்
19
ஏப்
2016
12:04
ஊட்டி: ஊட்டி மாரியம்மன் கோவிலில், 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேர் கலசம் அகற்றப்பட்டு, புதிய கலசம் பொருத்தப்பட்டது. பிரசித்த பெற்ற ஊட்டி மாரியம்மன் கோவிலில், இன்று தேரோட்டம் நடக்கிறது. தேரின் உச்சியில் பொருத்தப்பட்டிருந்த கலசம், உடைந்தது; தவிர, அக்கலசம், 30 ஆண்டுகள் பழமை வாய்ந்தாக இருந்ததால், நேற்று, புதிய கலசம் பொருத்தப்பட்டு, தேரின் மீது வைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள்,ஓம் சக்தி மந்திரம் முழங்க பங்கேற்றனர். இன்று, மதியம், திருத்தேரோட்டம் நடக்கிறது.