திருநெல்வேலி : மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நெல்லை டவுனில் ஜெயில் சமுதாயத்தினர் பங்கேற்ற ரத ஊர்வலம் நடந்தது. நெல்லை டவுன் கீழரதவீதியில் ஜெயின் கோயில் அமைந்துள்ளது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஜெயந்திவிழா கடந்த 25ம் தேதி துவங்கியது. இந்த விழா 10 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி தினமும் மகாவீரருக்கு தினமும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கிறது. 6ம் நாளான நேற்று அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மகாவீரர் படம் அலங்கரிக்கப்பட்டு ரத ஊர்வலம் நடந்தது. இதில் திரளான ஜெயின் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் 4 ரதவீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது. 4ம் தேதி ஜெயந்திவிழா நிறைவு பெறுகிறது.