பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர்திருவிழாவில் நேற்று ஆதிகேசவ பெருமாள் திருத்தேரோட்டம் நடந்தது. பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய சித்திரை தேர் திருவிழா வரும், 24ம் தேதி முடிவடைகிறது. இதில், கடந்த ஞாயிறு இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு மற்றும், 63 நாயன்மார்கள் புறப்பாடு சிறப்பான முறையில் நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று காலை, 5 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்று, காலை, 9 மணிக்கு பக்தர்கள் திருத்தேர் வடம் பிடிக்க, முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது.