Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆறு படைவீடு கொண்ட விநாயகர்! வெள்ளை மனம்! பிள்ளை குணம்!!
முதல் பக்கம் » சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு!
விநாயகர் சதுர்த்தி வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2011
12:08

கையில் மகிழ்ச்சி பொங்க மோதகம் ஏந்தியிருக்கும் கணபதியே! வணங்குவோருக்கு என்றும் எந்நேரமும் பிறவாவரம் வர காத்திருக்கும் குணநிதியே! பிரகாசமான ஒளிக்கற்றையை உடைய சந்திரனை தலையில் சூடியவனே! உலகத்தைக் காப்பதை விளையாட்டாகச் செய்பவனே! ஒப்பில்லாத உயர்ந்த தயாள குணம் கொண்டவனே! கஜமுகாசுரனைக் கொன்றவனே! அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பவனே! என்னைக் காக்கும் விநாயகனே! உனக்கு என் வணக்கம். இளஞ்சூரியனைப் போல் உள்ளத்தில் ஒளிகொண்டவனே! பாவங்களைக் களைந்து புண்ணியத்தை அருள்பவனே! தேவர்களுக்கெல்லாம் தேவனே! கருணை மிக்கவனே! யானை முகத்தோனே! அளப்பரிய சக்தியால் செல்வ வளத்தை அருள்பவனே! எல்லையில்லாத பரம் பொருளே! விநாயகப்பெருமானே! உன் திருவடிகளை சரணடைந்து வேண்டுகிறேன். உனக்கு என் நமஸ்காரம். உலக மக்களுக்கு நலமும் மங்களமும் தருபவனே! நெஞ்சார வணங்குபவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருபவனே! நாங்கள் செய்யும் குற்றங் களைக் கூட மன்னித்து அருள்பவனே! ஓம் என்ற மந்திர வடிவினனே! நிலையானவனே! கருணாமூர்த்தியே! சகிப்புத்தன்மை,பொறுமை, மகிழ்ச்சி ஆகிய நற்குணங்களை  தருபவனே! உலகத்தாரால் புகழ்ந்து போற்றப்படுபவனே! உனக்கு என் நமஸ்காரம்.

திரிபுரம் எரித்த சிவபெருமானுடைய மூத்த புத்திரனே! எங்கள் துன்பத்தை தீர்த்துவைப்பாயாக.

தூய்மையான உள்ளத்தை கொடு. உலகம் அழியும் காலத்திலும் உன் பக்தர்களை ஓடோடி வந்து காக்க வருபவனே! உண்மை வெற்றிபெற என்றும் துணை நிற்பவனே! மதநீர் பொழியும் கஜமுகனே! முதலும் முடிவுமில்லாத பரம் பாருளே! உன் திருவடிகளில் என் தலை தாழ்த்தி வணங்குகிறேன். எம்பெருமானே! மங்கலத்தை தந்தருள்வாயாக.

பிரகாசமான ஒளியைக் கொண்ட வெள்ளைத் தந்தத்தை கொண்டவனே! ஒற்றைக் கொம்பனே!

காலனுக்கே காலனான சிவபெருமானின் பிள்ளையே!
ஆதியும் அந்தமும் இல்லாதவனே! துன்பங்களைப் போக்குபவனே! யோகிகளின் நெஞ்சில் வசிக்கும் ஞானப்பொருளே! யானை முக கணேசா! காலமெல்லாம் உன்னையே நினைத்து,வணங்கி வருகிறேன். வள்ளலே! வல்லப கணபதியே! உன் திருப்பாதங்களில் சரணமடைகிறேன். விநாயகப்பெருமானே சரணம்.

ஆன் தி வே ஆண்டவன் : வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு விநாயகருக்கு உண்டு. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பவர் இறைவன் என்பதற்கு உதாரணமாகத் திகழ்பவர் இவரே. வீதியெங்கும் சிறியது முதல் பெரியது வரை இவருக்குத் தான் கோயில் இருக்கும். சின்ன கிராமமாக இருந்தாலும் குளக்கரையில் குடியிருப்பார். மழையையும், வெயிலையும் ஒரு பொருட்டாக நினைக்காமல் வெட்ட வெளியில் ஹாயாக காட்சி தருபவர். ஸ்கூல், காலேஜ், ஆபீஸ் என்று எங்கு கிளம்பினாலும் செல்லும் வழியில் பிள்ளையாரைத் தரிசிக்காமல் செல்ல முடியாது. அது மட்டுமல்ல! இரண்டு அருகம்புல் அல்லது யாருமே பயன்படுத்தாத எருக்கம்பூவில் நான்கை அவர் மீது தூவி விட்டால் போதும். மனம் குளிர்ந்து போவார்.

 
மேலும் சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு! »
temple news
மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். இவரை வணங்கி ... மேலும்
 
temple news
விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரைப் போற்றி வழிபடுவதற்கு வசதியாக ஆதிசங்கரர் பாடிய கணேச ... மேலும்
 
temple news
பரமேஸ்வரனின் பிள்ளை, பார்வதியின் பிள்ளை என்றாலே அவர் விநாயகர் என்று தெரியும். ஆனால், இவரை பிள்ளை யார் ... மேலும்
 
temple news
மனிதர்கள் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணிப்பது போல கடவுளர்க்கும் ஜாதகம் உண்டு. ஆவணியில் பிள்ளையார் ... மேலும்
 
temple news
இறைவன் செய்யும் தொழில்கள் பஞ்சகிருத்யங்கள் எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar