அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா: சூரிய சந்திர மண்டல காட்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2026 12:04
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று பெரிய தேர் மற்றும் அம்மன் தேர் ஆகியவற்றில் வைக்கப்படும் மகுடத்திற்கு புண்யோஜனை நடைபெற்றது. நேற்று இரவு சூரிய சந்திர மண்டல காட்சிகளில் ஆனந்தவல்லி சமேத சந்திரசேகர பெருமான் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.