பதிவு செய்த நாள்
22
ஏப்
2016
12:04
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சிந்தாமணி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலமாக நடந்தது. பொள்ளாச்சி– கோவை ரோடு சேரன் நகரில் சிந்தாமணி விநாயகர், பாலமுருகன், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சொர்ண பைரவர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், துர்கையம்மன் மற்றும் நவக்கிரக சன்னதிகளுக்கு நேற்று கும்பாபிேஷகம் நடந்தது. கடந்த 19ம் தேதி முதல், சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடந்து வந்த நிலையில், நேற்று காலை, 9:00 – 10:00 மணிக்கு கும்பாபிேஷகம், 10:00 மணிக்கு மேல் மகா அபிேஷகம், தச தரிசனம் நடைபெற்றது. பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகள் விழாவுக்கு தலைமை வகித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.