நெல்லிக்குப்பம் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2016 12:04
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. நெல்லிக்குப்பம் ரத்தினம் தெருவில் உள்ள சித்தி விநாயகர் கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று காலை கணபதி ஹோமம் நவகிரக ஹோமங்கள் நடந்தது. மாலை யாகசாலை பூஜை துவங்கியது. இன்று 22ம் தேதி காலை யாகசாலை பூஜையும் தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 9:00 மணிக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது. பூஜைகளை முருகானந்தம் குருக்கள் தலைமையில் செய்து வருகின்றனர்.