குளித்தலை: குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வர்கோவில் சித்திரை விழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடந்தது. இரண்டாவது நாள் நேற்று மலையைச்சுற்றி மேற்கு பகுதியில் தேர் நிறுத்தப்பட்டது. பொது மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். சித்ரா பவுர்ணமியொட்டி அதிகளவு பக்தர்கள் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை மலையைச் சுற்றி பக்தர்கள் பத்தியை கையில் ஏந்தியவாறு வலம் வந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று மாலை தேர் நிலைக்கு வரும்.