சித்தி புத்தியுடன் ஞான சொரூபமாக டெல்லியில் கோயில் கொண்டுள்ளார் கற்பக விநாயகர். டெல்லியில் வாழும் தென்மாநில மக்களின் நீண்ட நாள் பிரார்த்தனையாலும், விநாயகர் மந்திர் கமிட்டியின் பெரும் முயற்சியுடனும் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடந்தேறியது. ஆஞ்சநேயர், நவகிரகங்கள், ஓம்காரேஸ்வரர், பார்வதி, கார்த்திகேயன் சன்னதிகள் அமைந்துள்ளன. இங்குள்ள ஓம்காரேஸ்வரர் நர்மதை நதிக்கரையிலிருந்து கொண்டுவரப்பட்ட சுயம்பு மூர்த்தி. இங்கு விநாயகர் சதுர்த்தி, ராமநவமி, அனுமத் ஜெயந்தி, சாரதா நவராத்திரி, சிவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. 50வது பொன்விழாவைக் கண்ட இத்தலத்தில் சொர்ணபந்தன கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. இந்த வைபத்தைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கற்பக விநாயகரின் இறையருள் பெற்றனர்.