சாது ஒருவர் தேசாந்திரம் போய்க் கொண்டிருந்தார். வழியில் ஓரிடத்தில் ஆட்டுக் கடா ஒன்றைக் கண்டார். அது, இவரைக் கண்டதும் தலையை தாழ்த்தியபடி சற்று பின்னால் நகர்ந்தது. சாதுவுக்கு சந்தோஷம். புத்திசாலி ஆடு. நமது அருமை பெருமையைத் தெரிந்துகொண்டு மரியாதை செய்கிறது என்று மனதுக்குள் குதூகலித்தார்! ஆனால், மறு கணம் அந்த ஆட்டுக்கடா சட்டென்று முன்னால் பாய்ந்து வந்து அந்த சாதுவைப் முட்டிக் கீழே தள்ளி விட்டது! பல தருணங்களில் நாமும் இந்த சாதுவைப் போன்றே... சிலரை மரியாதைக்கு உரியவர்களாகவும் சான்றோர்களாகவும், திறமைசாலிகளாகவும் நம்பி ஏமாந்து போகிறோம். நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் இது போன்ற ஏமாற்றங்களைத் தவிர்த்தால், நம் வாழ்வின் ஏற்றங்களை யாராலும் தடுக்க முடியாது.