பதிவு செய்த நாள்
09
மே
2016
12:05
கோபிசெட்டிபாளையம்: பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவிலில், ஏக தின லட்சார்ச்சனை நாளை (10ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி இன்று மாலை, 6 மணிக்கு விநாயகர் பூஜை நடக்கிறது. நாளை காலை, 9 மணி முதல் மாலை, 7 மணி வரை ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது. மறுநாள் (11ம் தேதி) காலை, 10 மணிக்கு, 1,008 சங்காபிஷேகம், பகல், 12 மணிக்கு பாவாடை நைவேத்யம், மகா தீபாராதனை நடக்கிறது. அன்று மாலை, 5 மணிக்கு அம்பாள் திருவுலா காட்சி நடக்கிறது. ஏக தின லட்சார்ச்சனையில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள், அர்ச்சனை ஒன்றுக்கு, 25 ரூபாய் செலுத்தி, பதிவு செய்ய வேண்டும்.