பதிவு செய்த நாள்
09
மே
2016
12:05
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும், இரண்டு கால பூஜையும், வாரம் தோறும் சனி வார வழிபாடும் நடக்கிறது. சனிக்கிழமையான நேற்று முன்தினம் அதிகாலை நடை திறக்கப்பட்டு, மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபி?ஷகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நரசிம்மருக்கு, பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், ஆகியவற்றால் திருமஞ்சனம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.