கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த விளக்கப்பாடி சுப்ரமணியர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கம்மாபுரம் அடுத்த விளக்கப்பாடி சுப்ரமணியர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை 8:00 மணியளவில் அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 5:00 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இரவு 8:00 மணியளவில் கந்தபுராணம் கதைப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 8:00 மணியளவில் அபிஷேக ஆராதனை, பகல் 12:00 மணியளவில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து, பால்குடம் சுமந்து, செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.