பங்கார்பேட்டை: பங்கார்பேட்டை கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவம் நடந்தது. கோதண்டராம ஸ்வாமி பிரம்மோற்சவ ரதத்தை பங்கார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.என்.நாராயணசாமி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். கோலார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்தோர் உற்சவத்தில் பங்கேற்றனர். ரத ஊர்வலத்தின் போது, பூ மாறி பொழிந்து, கோவிந்தா கோஷம் எழுப்பினர். பிரம்மோற்சவ ஏற்பாடுகளை பஜ்ரங்தள், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் செய்திருந்தனர்.