மதுரையில் காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2016 12:05
மதுரை: மதுரையில் அனுஷத்தின் அனுகிரகம் சார்பில் காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 123வது ஜெயந்தி விழா நடந்தது. நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். வக்கீல் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். சுவாமியின் ஐம்பொன்னால் செய்யப்பட்ட சிலை மற்றும் வெள்ளி பாதுகைக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நிர்வாகிகள் சந்திரசேகர், போலீஸ் உதவி கமிஷனர் மணிவண்ணன், எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் பேசினர். சுவாமிகளின் சிலையை ஒவ்வொரு ஞாயிறும் மதுரையில் விரும்பும் பக்தர்களின் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னதானங்கள் செய்யலாம், என தெரிவிக்கப்பட்டது.