அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே மரியம்மாள்குளத்தில் காணிக்கை மாதா கோயில் விழா நடந்தது. பங்குத்தந்தை பிளேஸ் கொடியேற்றி துவக்கி வைத்தார். திருப்பலி மற்றும் உலக சமாதான ஆராதனை ஜெபக்கூட்டம் நடந்தது. அன்னதானத்தை ஹெலன்கீதா துவக்கினார். பீட்டர், செல்வராஜன், தாமஸ் உட்பட பங்கு சகோதரர்கள் ஏற்பாடுகளை செய்தனர். மின் அலங்கார தேர் பவனி நடந்தது.