விழுப்புரம்: சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அவதார தின விழா, விழுப்புரம் சங்கரமடத்தில் கொண்டாடப்பட்டது. விழாவை யொட்டி, நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு விநாயகர் பூஜைகள் நடந்தது. இதனை தொடர்ந்து நடந்த கலச பூஜையில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த வேத பயின்றோர் பலர் பங்கேற்றனர். பின்னர், பகல் 12:00 மணிக்கு சங்கரமடத்தில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பாதுகை மற்றும் விக்ரகத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், மகா தீபாராதனை நடந்தது. மதியம் 2:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும், இரவு 7:00 மணிக்கு சுவாமிகளின் விக்ரகம், திருவுருவ படம் பல்லக்கில் வைத்து அலங்கரிக்கபட்டு, நான்கு மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழுப்புரம் சங்கரமடம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.