திண்டிவனம்: திண்டிவனத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழா நடந்தது. திண்டிவனம் வசந்தபுரம் கரியன் நகரில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி, காலை ௭:00 மணிக்கு, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ஜெப ஹோமம், தீபாராதனை நடந்தது. மதியம் ௨.௪௫ மணிக்கு விஷ்ணு சஹஸ்ரநாம, லலிதா சஹஸ்ரநாம பாராயணமும் நடந்தது. மாலை ௬:௦௦ மணிக்கு, சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா சுவாமிகளின் திருவுருவ படத்தின் வீதியுலா நடந்தது. மயிலம் பொம்மபுர ஆதீனம் ௨௦ம் பட்டம் சிவஞானபாலய சுவாமிகள், வீதியுலாவை துவக்கி வைத்தார். திண்டிவனம் நகரத்தில் மாட வீதியுலா சென்று, மீண்டும், கரியன் நகருக்கு வீதியுலா வந்தடைந்தது.