பதிவு செய்த நாள்
25
மே
2016
12:05
மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு தாலுகா, பிள்ளாநத்தம் கிராமம் மேட்டுபாளையத்தில், அம்பளாயம்மன் திருவிழா மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம், தீர்த்தகுடம் அழைத்தல், குதிரை அழைத்தல், அம்பளாயம்மனுக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு, 11 மணிக்கு, பச்சைவடுவு பார்க்க குதிரை வாகனம் படைக்கலத்துடன் செல்லல் நிகழ்ச்சியும், வாண வேடிக்கையும் நடந்தது. நேற்று காலை, 8 மணிக்கு பதியில் பூஜை செய்து, காகத்துக்கு உணவு வைக்கப்பட்டது. தொடர்ந்து, அம்பளாயம்மனுக்கு மறுபூஜையும், பொங்கல் வைத்தலும், கிடாவெட்டியும் அம்மனுக்கு காவு சோறு போடப்பட்டது. இன்று காலை மாரியம்மனுக்கு பொங்கல் வைத்தல் மற்றும் மாவிளக்கு பூஜையும், மாலை, 3 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.