தலைவாசல்: தலைவாசல் அருகே, வைகாசி மாதத்தை முன்னிட்டு குல தெய்வ வழிபாடுகள் அதிகளவில் நடந்து வருகின்றன. தலைவாசல் ஒன்றியத்தின் பல பகுதிகளில், வைகாசி மாதத்தை முன்னிட்டு குல தெய்வ சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. நேற்று முகூர்த்த தினமாக இருந்ததால் மும்முடி, தலைவாசல், நத்தக்கரை, பெரியேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குல தெய்வங்கள் மற்றும் எல்லை சாமிகளுக்கு ஆடு, கோழிகள் வெட்டி காணிக்கையாக கொடுத்தனர். ஐய்யனார் கோவில், முனியப்பன் கோவில் உள்ளிட்டவற்றில் பெண்கள் உட்பட அனைத்து தரப்பினரும் மொட்டை அடித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். பெரும்பாலான இடங்களில் குழந்தைகளுக்கு காது குத்துதல், கிடா விருந்து என பரவலாக நடந்ததால், தலைவாசலின் பெரும்பகுதி நேற்று விழாக்கோலம் பூண்டு இருந்தது.