திருக்கோவிலுார்: திருக்கோவிலுார்‚ ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீராமநவமி மகோற்சவம் துவங்கியது. திருக்கோவிலுார்‚ கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில்‚ சத்சங்கம் சார்பில் 51வது ஆண்டு ஸ்ரீராமநவமி மகோற்சவ விழா நேற்று முன்தினம் துவங்கியது. இரவு 7:30 மணிக்கு ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் விழாவினை துவக் கிவைத்தார். பரனுார் கிருஷ்ணபிரேமி சுவாமிகளின் உபன்யாசம் துவங்கியது. வரும்30ம் தேதி வரை இரவு 7:30 மணிக்கு, கிருஷ்ணபிரேமி சுவாமிகளின் உபன்யாசம் நடக்கிறது. வரும் 31ம் தேதி ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு திவ்யநாம பஜனை நடக்கிறது. வரும் 1ம் தேதி காலை 8:00 மணிக்கு உஞ்சவ்ருத்தி‚ பஜனை மற்றும் ராதா திருக்கல்யாணம் நடக்கிறது. விழா நடைபெறும் 10 நாட்களும் நடராஜசர்மாவின் ஸ்ரீ மத்ராமாயண நவாக மூல பாராயணம் நடக்கிறது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில் சத்சங்க நிர்வாகிகள், விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.