ஏற்காடு: ஏற்காடு சேர்வராயன் கோவில் தேரோட்டம் விமர்சையாக நடந்தது. ஏற்காட்டில், பிரசித்தி பெற்ற சேர்வராயன் கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. விழாவில், ஏற்காட்டின், 67 கிராம மக்களும் சேலம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மதியம், 2 மணிக்கு கோவில் கமிட்டியாளர்களும், பொதுமக்களும் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் கோவிலை சுற்றி முடித்து மாலை, 4 மணிக்கு சேர்வராயன் மற்றும் காவேரி அம்மன் சுவாமி சிலைகள் கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டது. தேரோட்ட விழாவை முன்னிட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.