Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐந்து லட்சம் மல்லிகை பூவில் ... உலகளந்த பெருமாள் கோவிலில் வசந்தோற்சவம்! உலகளந்த பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2016
10:05

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று, வெகு விமரிசையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

Default Image
Next News

கடந்த சனிக்கிழமை கருட சேவை உற்சவம் நடைபெற்றது. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஏழாம் நாள் உற்சவமான தேரோட்டம் நேற்று, வெகு விமரிசையாக காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, கோவிலில் இருந்து புறப்பட்ட பெருமாள், 4:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவியருடன், திருத்தேரில் எழுந்தருளினார். பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, 6:30 மணிக்கு நிலையிலிருந்து தேர் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், ’வரதராஜா... தேவராஜா’ என, கோஷமிட்டவாறு, தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். வழியெங்கும், மோர், பானகம், உணவு வகைகள் தானமாக வழங்கப்பட்டன. வரதராஜ பெருமாள் தேரில் பவனி வந்த காட்சியை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபட்டனர். இதில், காஞ்சிபுரம் மட்டுமல்லாமல், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பிற்காக, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காந்தி சாலை, காமராஜர் சாலை, இந்திராகாந்தி சாலை, ராஜவீதிகள், செங்கழுநீரோடை வீதி போன்ற வீதிகளில் வலம் வந்து, 1:00 மணிக்கு, மீண்டும் தேர், நிலைக்கு வந்து சேர்ந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar