பதிவு செய்த நாள்
30
மே
2016
12:05
ஆர்.கே.பேட்டை: ஈதலகுப்பம் கிராமத்தில், நேற்று, திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் காப்பு கட்டி, அக்னி குண்டத்தில் இறங்கினர். நெடுங்கல் அடுத்த, ஈதலகுப்பம் கிராமத்தில் உள்ளது, திரவுபதியம்மன் கோவில். இந்த கோவிலில், கடந்த, 19ம் தேதி தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவில் வளாகத்தில் தினசரி மகாபாரத சொற்பொழிவு, தெலுங்கு மொழியில் நடத்தப்பட்டது. இரவில், தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. நேற்று காலை, துரியோதனன் படுகளமும், மாலை, 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் மேற்கொண்டிருந்த திரளான பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.