கடலுார்: கடலுார் வேணுகோபாலபுரத்தில் பாதாள சாக்கடை ‘மேன்ஹோல்’ உடைந்து கிடப்பதால் விபத்து அபாயம் உள்ளது. கடலுார் மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இப்பள்ளி எதிரில் பாதாள சாக்கடை ‘மேன்ஹோல்’ உடைந்து, உள்வாங்கியுள்ளது. ‘மேன்ஹோல்’ உடைந்துள்ளது குறித்து எவ்வித எச்சரிக்கை அறிவிப்பு ÷ பார்டும் வைக்கப்படவில்லை. இதனால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது. குறிப்பாக, இரவு நேர ங்களில் வாகன ஓட்டுனர்கள் பள்ளத்தில் விழுந்து காயமடையும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. பள்ளி மாணவர்கள் அதிகளவில் வந்து செல்லும் இச்சாலையில் உடைந்து கிடக்கும் ‘மேன்ஹோலை’ சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.