பதிவு செய்த நாள்
02
ஜூன்
2016
11:06
பெ.நா.பாளையம்: துடியலுார் அருகே தொப்பம்பட்டியில் உள்ள சூலத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. இங்குள்ள ராஜராஜேஸ்வரி நகரில் சூலக்கல் தோட்டத்தில் எழுந்தருளியுள்ள சூலத்தம்மன், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த லிங்க வடிவில் ஆனது. நடுவில் திரிசூலம், வலது மேல் புறத்தில் சூரியனும், இடது மேற்புறத்தில் சந்திரனும் வடிவமாக கொண்டது. திரிசூலம் சிவசக்தி சொரூபமாக கருதப் படுவதால், வாகனமாக நந்தி அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தில் வடக்கு நோக்கி சூலத்தம்மனும், கிழக்கு நோக்கி மாரியம்மனும், தெற்கு நோக்கி விஷ்ணு சக்தியும், மேற்கு நோக்கி சிவசக்தியும் அமையப் பெற்றுள்ளது. விழாவையொட்டி, கணபதி ஹோமம், ரக்ஷா பந்தனம், மூல மந்திர ஜபம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. கும்பாபிஷேக விழா இன்று காலை, 5:30 மணிக்கு நடக்கிறது. விழாவையொட்டி விக்னேஸ்வர பூஜை, தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.