பதிவு செய்த நாள்
02
ஜூன்
2016
11:06
மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை அடுத்த ஆலடி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 24ம் தேதி மாலை 5:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை, இரவு 9:00 மணிக்கு பூ ர்ணாகுதி, தீபாராதனை, 25ம் தேதி காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும், இரவு 9:30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தன. தொடர்ந்து 26ம் தேதி கும்பாபிஷேகத்தையொட்டி, அதிகாலை 5:00 மணிக்கு கோ பூஜை, காலை 9:45 மணிக்கு கடம் புறப்பாடாகி, காலை 10:00 மணிக்கு அய்யனார், விநாயகர் கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார்.