சாயல்குடி: சாயல்குடியில் உள்ள ராமநாதபுரம் சமஸ்தானத்தின் நிர்வாகத்திற்குட்பட்ட மீனாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு 16 வகையான அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபாடு செய்தனர். சக்தி மற்றும் சிவ ஸ்தோத்திரம் பாடப்பட்டது. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற சங்கல்ப பூஜை செய்யப்பட்டது. கோயில் ஸ்தானிகர் ரவிச்சந்திர குருக்கள் பூஜைகளை செய்திருந்தார்.