புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, சேரன் வீதியில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. கோவில் புணரமைப்பு பணிகள் நிறைவுற்று கடந்த, 7ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. முளைப்பாரி எடுத்து, ஊர்வலமாக தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. நேற்று காலை சிறப்பு பூஜை செய்து, 10 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், காமாட்சியம்மன் மூலவர், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பேரூர் ஆதினம் இளையபட்டம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் விழாவை நடத்தி வைத்தனர்.