மேச்சேரி காளியம்மன் கோவிலில் ரூ.23 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2016 12:06
மேச்சேரி: மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில், 21 உண்டியல்கள் உள்ளன. அதில், ஏழு உண்டியல்களில், பக்தர்கள் போட்ட காணிக்கை பணம், இரு நாட்களுக்கு முன் எண்ணப்பட்டது. அந்த உண்டியல்கள் மூலம், 23.18 லட்சம் ரூபாய் வசூலானது. கடந்த ஜூலை முதல், இதுவரை மேச்சேரி கோவில் உண்டியல் காணிக்கை மூலம், 76 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது.